கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் | மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் |
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் 'கஜானா'. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா, சாந்தினி நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வருகிற 9ம் தேதி படம் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் வேதிகா பேசியதாவது: கஜானா படத்தின் ஒன்லைன் சொல்லும் போதே, எனக்கு இன்டர்ஸ்டிங்காக இருந்தது. ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியூவில் நான் இதை கேட்ட போது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன்.
ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படம் சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். குழந்தைகளை மகிழ்விக்கப்போகும் ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், தயாரிப்பாளரும் அவர் தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது சாதாரண விசயம் இல்லை. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, என்றார்.