லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் அழகிருந்தும், திறமையிருந்தும் சில நடிகைகளால் முன்னணிக்கு வர முடியாது. அப்படிப்பட்டவர்களில் வேதிகாவும் ஒருவர். 2006ம் ஆண்டில் வெளிவந்த 'மதராஸி' படத்தில் அறிமுகமாகி அடுத்து வெற்றிப் படமான 'முனி' படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் 'பரதேசி, காஞ்சனா 3' ஆகிய படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். தற்போது தென்னிந்திய மொழிகளில் தலா ஒரு நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.
கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாவில் பிகினி உள்ளிட்ட விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சற்று முன் அற்புதமான ரோஸ் நிற பிகினி புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டுள்ளார். வேதிகாவா இது என நம்ப முடியாத அளவிற்கு இருக்கின்றன அப்புகைப்படங்கள்.