தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
விழுப்புரம் கூவாகம் திருநங்கைகள் அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்ற நடிகர் விஷால் திடீரென மயக்கம் அடைந்தது, நேற்று இரவு பரபரப்பு செய்தியானது. அவர் உடலுக்கு பழைய படி பிரச்னையா? அவர் எப்படி இருக்கிறார் என கோலிவுட்டில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அவர் தரப்போ, ''காலையில் இருந்து சரியாக சாப்பிடவில்லை. ஜூஸ் மட்டுமே குடித்தார். நீண்ட பயணம், கூட்டம் அதிகம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. டாக்டர்கள் பார்த்துவிட்டு ஒன்றுமில்லை. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்'' என அட்வைஸ் செய்ததாக கூறியது.
உடல் எடை பிரச்னை, டயட் காரணமாக பல ஆண்டுகளாக விஷால் அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை. வேறு வகையான டயட் உணவுகளை சாப்பிடுகிறார். அதனால், சரியாக சாப்பிடாததால் அவர் வீக் ஆகிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
அடுத்து ரவி அரசு இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் விஷால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இயக்குனர் கவுதம்மேனனும் விஷாலை வைத்து படம் பண்ண முயற்சித்து வருகிறார்.