ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
மிஷ்கின் இயக்கம் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், நரேன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ட்ரைன்'. விஜய் சேதுபதி நடித்து அடுத்தடுத்து வர உள்ள படங்களில் இதுவும் ஒன்று.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இப்படத்தின் முழு கதையை அப்படியே சொல்லிவிட்டார் மிஷ்கின். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. என்ன சார், இப்படி முழு கதையையும் சொல்லிட்டீங்களே என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பொதுவாக படம் வெளியாகும் வரை எந்த ஒரு இயக்குனரும், படத்தில் நடித்துள்ளவர்களும் கதையைப் பற்றி சுருக்கமாகக் கூட சொல்ல மாட்டார்கள். அவ்வளவு சஸ்பென்ஸ் வைப்பார்கள். ஆனால், மிஷ்கின் முழு கதையையும் சொல்லியிருப்பது படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்.
அதேசமயம், அவர் சொன்ன கதையைக் கேட்ட சிலர் இது “எ மேன் கால்டு ஓட்டோ' படத்தின் இன்ஸ்பிரேஷன் எனவும் கமெண்ட் செய்துள்ளார்கள். சில மாற்றங்களைச் செய்து 'ட்ரைன்' கதையாக உருவாக்கியுள்ளார் என்கிறார்கள்.
மிஷ்கின் முழு கதையைச் சொல்லியிருந்தாலும் படத்தின் ஒரு வரி கதையை மட்டும் நாம் சொல்கிறோம். வாழ்க்கை வெறுத்துப் போன ஒருவர் ட்ரைனில் பயணம் செய்கிறார். அந்தப் பயணம் அவருக்கு வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை கற்றுக் கொடுத்தது,” என்பதுதான் அந்த ஒரு வரிக் கதை.
ஒரு வரிக் கதையை இரண்டரை மணி நேரத் திரைக்கதையாக எப்படி சொல்கிறோம் என்ற சூட்சுமம்தான் ஒரு படத்தின் வெற்றி, அதை மிஷ்கின் சிறப்பாக செய்திருப்பார் என்று நம்புவோம். ட்ரைன் வரும் வரை காத்திருப்போம்.