கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

விபின் ராதாகிருஷ்ண இயக்கத்தில் கீதா கைலாசம் நடிக்கும் படம் ‛அங்கம்மாள்'. பெருமாள் முருகனின் ‛கோடித்துணி' என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த கதைக்காக ஜாக்கெட் அணியாமல் அந்த காலத்து பெண்ணாக நடித்துள்ளார் கீதா கைலாசம். அந்த கேரக்டருக்காக பீடி, சுருட்டு பிடிக்கவும் பயிற்சி எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛பல படங்களில் அம்மாவாக, குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் இதில் கதை நாயகியாக நடிக்கிறேன். 1990 காலகட்டத்தில் நாமக்கலில் இந்த கதை நடப்பதாக இருந்தது. ஆனால் நாங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த கதைக்காக டிவிஎஸ் 50 ஓட்டினேன். இந்த கேரக்டர் பிடி, சுருட்டு பிடிக்கும் என்பதால் படப்பிடிப்புக்கு முன்பே அந்த காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்தேன். ஒரு அம்மா, இரண்டு மகன்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் ஜாக்கெட் அணிவது ஆகியவை இந்த கதையின் முக்கியமான விஷயம்.
நியூயார்க் திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா உள்ளிட்ட பல விழாக்களில் இந்த படத்துக்கு வரவேற்பும், விருதும் கிடைத்துள்ளது. எங்கள் குடும்பத்தில் பலரும் தேசிய விருது வாங்கி இருக்கிறார்கள். எனக்கு தேசிய விருது கிடைக்குமா என தெரியவில்லை. தேசிய விருது கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி. படம் பார்த்த எழுத்தாளர் பெருமாள் முருகனும் படக்குழுவை பாராட்டுயுள்ளார். இப்படி மாறுபட்ட, வித்தியாசமான கதைகளில் நடிப்பது எனக்கும் சவாலாக இருக்கிறது'' என்றார்.




