ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பாக தமிழ்த் திரையுலகத்தில் தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து வந்தது. அதன்பின் நீக்கிக் கொள்ளப்பட்டது. அதனால், பழையபடி தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழித் தலைப்புகள் வைப்பது அதிகமாகியது.
கடந்த ஓரிரு வருடங்களில் அது மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த 2025ம் வருடத்தில் மட்டும், இதுவரை வெளிவந்த படங்களில் பாதிப் படங்கள் ஆங்கிலத் தலைப்புப் படங்கள்தான். அடுத்து வர உள்ள படங்களில் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், ஏஸ், லெமன், மெட்ராஸ் மேட்னி, ஸ்கூல், ஜின் த பெட், த வெர்டிக்ட், தக் லைப், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், டிஎன்ஏ, பீனிக்ஸ், ப்ரீடம், கூலி, மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, பைசன், டூயுட்” என ஆங்கிலத் தலைப்பு படங்களே அதிகமாக வர உள்ளன.
தலைப்புகள்தான் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள் என்றால், படத்தின் விளம்பரங்களில் கூட தமிழ்ப் பெயர்களும், தமிழ் வார்த்தைகளும் இடம் பெறுவதில்லை. அவற்றிற்கான முன்னோட்டங்களில் கூட ஆங்கில வார்த்தைகளே அதிகம் இடம் பெறுகின்றன.
தமிழ்ப் படங்களின் பெயர்களில் தமிழ் இல்லாத போது, தமிழ்ப் பாடல்களிலும் தமிழ் காணாமல் போய் ஆங்கிலம் கலந்த பாடல்கள்தான் அதிகம் வருகின்றன.
கடைகளின் பெயர்கள் தமிழில் இடம் பெற்றாக வேண்டும் என்று உத்தரவிடுவதைப் போல இதற்கும் தமிழக அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் எழுந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.