தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார் பிருத்விராஜ். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசையும் நாட்டுப்புறப்பாடல் பாணியில் அமைந்திருந்த இரண்டு அதிரடி பாடல்களும் முக்கியமாக தூண்களாக அமைந்திருந்தன.
இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலரிலேயே தனது மிரட்டலான பின்னணி இசை மூலம் அதிக எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தார் தீபக் தேவ். இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் சிறிய பகுதியை பாடுவதற்கு ஒரு புதிய பெண் குரல் ஒன்றை தேடி வந்தார் தீபக் தேவ். அப்போது பிரித்விராஜின் மகள் அலங்க்ரிதாவின் குரலை கேட்டதும் அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்து இந்த படத்தில் அந்த பாடலை பாட வைத்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே பிரித்விராஜன் மனைவி ஒரு தயாரிப்பாளராக இருக்கும் நிலையில் அவரது மகளும் சினிமாவில் இந்த பாடல் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல பிரித்விராஜின் சகோதரர் நடிகர் இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனாவும் இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.