டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியுள்ளது. நேற்று இந்த படம் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது. லூசிபர் திரைப்படம் வெற்றி பெற்றபோது அதை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க விரும்பினார் சிரஞ்சீவி. காட்பாதர் என்கிற பெயரில் இயக்குனர் மோகன்ராஜா அந்த படத்தை இயக்க, மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்திருந்த இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தை நடிகர் சல்மான் கான் ஏற்று நடித்தார். ஆனாலும் காட்பாதர் திரைப்படம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லாலிடம் எம்புரான் படமும் ரீமேக்காக வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது, முதல் பாகத்தில் கதையில் சில மாற்றங்களை செய்து தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். அது கூட படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கலாம், அதனால் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தான் கூறியிருந்தார். இதே கேள்வி தற்போது இயக்குனர் பிரித்விராஜிடமும் இன்னொரு நிகழ்ச்சியின் போது கேட்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக சிரஞ்சீவி, சல்மான்கானை வைத்து எம்புரான் தெலுங்கு ரீமேக்கை நீங்களே இயக்குவீர்களா என்றும் பிரித்விராஜிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த பிரித்விராஜ், “இப்போது எம்புரான் படத்தை மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறார்கள். அதனால் ரீமேக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. அதேசமயம் என்னைவிட மிகத் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த படத்தின் ரீமேக் பணிகளில் இறங்கினால் நான் உண்மையிலேயே சந்தோஷப்படுவேன்” என்று கூறியுள்ளார்.




