ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' உள்ளிட்ட சில படங்கள் வெளியாக உள்ளன. அதனால், 'ஜனநாயகன்' படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என கூறப்பட்டது. ஆனால், முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமைக்காக சுமார் 10 கோடி அட்வான்ஸ் கொடுத்து வியாபாரத்தை நிறைவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது. மொத்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வரவில்லை.
தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும் படத்தை வாங்க ஒரு நிறுவனம் முன்வந்திருப்பதே பெரிய விஷயம் என்கிறார்கள். விஜய் நடித்து வெளிவந்த கடைசி படமான 'தி கோட்' படம் தெலுங்கில் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகத் தகவல். ஆனால், அங்கு படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் 'ஜனநாயகன்' படத்திற்கும் அதே அளவில் வியாபாரம் நடக்கும் எனத் தெரிகிறது.




