புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி |

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. இதில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது.
இந்த படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக இருந்த நிலையில், கரூர் சம்பவம் எதிரொலியாக அந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வாரத்தில் முதல் பாடலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விஜய், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நிற்க, அவரை மக்கள் அனைவரும் தொட்டு வரவேற்பது போல் இடம்பெற்றுள்ளது. திடீரென போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் வைரலாக்கிய நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் படத்தின் முதல் பாடல் நவ., 8ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.