தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலேசியாவில் நாளை (டிச.,27) நடக்க உள்ள 'ஜனநாயகன்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக நடிகர் விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று காலை சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கே நடக்கும் முன்னேற்பாடு வேலைகளை கவனிக்க, கலை நிகழ்ச்சி ரிகர்சலுக்காக சில தினங்களுக்கு முன்பு ஒரு குழு அங்கே சென்றடைந்துவிட்டது.
மலேசியாவில் நடக்கும் ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா, விஜய் நடிக்கும் கடைசி பட பாடல் வெளியீடு, அனேகமாக விஜய் சம்பந்தப்பட்ட கடைசி சினிமா நிகழ்ச்சி என்பதால் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே வீட்டில் பேச பயற்சி எடுத்து இருக்கிறார் விஜய். இதை சேர்க்க வேண்டும், அதை சேர்க்க வேண்டும் என தனது உரையை தயார் செய்து இருப்பதாக தகவல்.
ஜனநாயகன் படக்குழு தவிர, விஜயை வைத்து படம் இயக்கிய நெல்சன் உள்ளிட்ட சிலரும் அந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். தவெக கட்சியின் மூத்த நிர்வாகிகளும் மலேசியா சென்றுள்ளனர். விஜய் பெற்றோர்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மகன், மகள், மனைவி வருவது டவுட்தான். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் மனைவி கலந்து கொள்வது இல்லை. குழந்தைகள் எப்போதும் வருவது இல்லை.
ஜனநாயகனில் வழக்கமான முறை தொடருமா? அல்லது வருவார்களா என்பது நாளை தெரிந்துவிடும். இதற்கிடையில் விழாவை நடிகர் ரியோராஜ் மற்றும் ஆர்.ஜே.விஜய் தொகுத்து வழங்குவதாக தகவல். ஹீரோயின் பூஜாஹெக்டே டான்ஸ் புரோகிராம் இருக்க வாய்ப்பு. ஒரு லட்சம்பேர் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.