சமுத்திரக்கனிக்கு இயக்குனர் பிரியதர்ஷன் சொன்ன அறிவுரை | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகப் படத்தின் பெயர் 'சிக்மா' | நகை கடத்தல் நடிகையின் கூட்டாளி நடிகருக்கு சிறையில் சொகுசு வசதி ; வெளியான அதிர்ச்சி வீடியோ | எதிர்பார்த்த 'வியூஸ்கள்' பெறாத 'தளபதி கச்சேரி' | ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர் | 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார் : இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட ஆள் இல்லை | சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? |

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'. இதில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. நேற்று இந்த படத்தின் முதல் பாடல் 'தளபதி கச்சேரி ' எனும் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா, நடக்காதா என்கிற குழப்பம் நிலவியது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை உறுதி செய்துள்ளனர். நமக்கு கிடைத்த தகவலின் படி, ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 27ம் தேதியன்று மலேசியாவில் உள்ள புத்ரா ஜெயா நகரில் நடைபெறுகிறது. இதற்கான முன் ஏற்பாடு பணிகள் இப்போது துவங்கி நடைபெற்று வருகிறது.




