சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படம் 'தொடரும்'. மோகன்லால் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'எல் 2 எம்புரான' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 175 கோடி. அதிக பட்ஜெட் படம் என்றாலும் குறைவான லாபத்தையே அந்தப் படம் தந்தது.
அதே சமயம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான 'தொடரும்' படம் தற்போது உலக அளவில் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த மலையாளப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு அந்த சாதனையை '2018' படம் வைத்திருந்தது. அந்த சாதனையை 'எல் 2 எம்புரான்' குறைந்த வித்தியாசத்தில் முறியடித்தாகச் சொன்னார்கள். இப்போது 'தொடரும்' படம் அதை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கேரளாவில் அதிக வசூலைக் குவித்த முதல் நான்கு படங்களில் மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான், புலி முருகன்' ஆகிய மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.