பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
பிரபல பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம். அவர் பேச்சு அதிரடியாக இருக்கும். ஒவ்வொரு மேடையிலும் பேசும்போதும் தமிழன் வென்றே தீருவான் என்று அரங்க அதிர சவுண்டு விடுவார். அவ்வப்போது கில்டு சினிமா அமைப்பு சம்பந்தப்பட்ட சர்ச்சையிலும் சிக்குவார். இப்போது குடும்ப பிரச்னையும் அவரை தொடர்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த இரவுப்பறவை பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியவர் ''என்னை சுற்றி பெரிய பிரச்னை ஓடுகிறது. என்னை கொல்ல சதி நடக்கிறது. நான் துாத்துக்குடிகாரன், வீரம் மிகுந்தவன். ஆனாலும், எனக்கு எதுவும் நடந்து விடக்கூடாது. இந்த மேடையில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என்னை பாதுகாக்க வேண்டும். அவர்கள் இருக்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன்' என்று பேசினார்.
கடைசியில் விழாவில் பேசிய திருமாவளவன். 'ஜாக்குவார் என்றால் சிறுத்தை என்று அர்த்தம். அவர் வீரம் மிகுந்தவர். அவருக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் இருக்கிறோம். ஆனாலும், போலீசில் டிஜிபியிடம் பேசி அவருக்கு துப்பாக்கி உரிமம் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறேன்'' என்றார்