போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதுவும் 1980களில் இளையராஜாவின் வருகைக்குப் பிறகு பாடல்களின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்தது. இப்படியான சூழலில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த படம் 'வண்ணக் கனவுகள்'.
இந்தப் படம் எம்டி வாசுதேவ நாயர் எழுதிய 'அடியொழுக்கு' என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். மலையாள படத்தை ஐ வி சசி இயக்கியிருந்தார். மம்முட்டி மோகன்லால் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் வருது கிடைத்தது.
தமிழ் பதிப்பை கே. பாலச்சந்தரின் உதவி இயக்குனர் அமீர்ஜான் இயக்கியிருந்தார். இந்த படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.
மம்முட்டி நடித்த கேரக்டரில் கார்த்தியும், மோகன்லால் நடித்த கேரக்டரில் முரளியும் நடித்தனர். படத்திற்கு ஷியாம் பின்னணி இசைத்திருந்தார். பாடல்கள் இல்லாவிட்டாலும் இந்த படம் பெரிய வரவேற்பு பெற்றது. 25க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.