போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சினிமா பார்ப்பது மேற்கத்திய கலாசாரம் என்றும் தமிழ் பாரம்பரிய நாடகங்களை சினிமா அழித்து விடும் என்றும் சினிமாவுக்கு எதிரான ஒரு பிரசாரம் இருந்து கொண்டே இருந்தது. இந்த கருத்துக்களின் மாற்றும் வகையில் தனிப்பாடல் ஒன்று 'ராஜா ராணி' படத்திற்காக உருவாக்கப்பட்டது.
1956ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏ பீம்சிங் இயக்கினார். சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், பத்மினி, ராஜ சுலோச்சனா, என்.எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்தப் படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதினார். அவர் எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' 'சாக்ரடீஸ்' போன்ற நாடகங்களும் இந்த படத்தில் இடம்பெற்றது.
படத்தின் இந்த சிறப்பு அம்சங்களை சொல்லி படம் பார்க்க வருமாறு அழைத்து ஒரு பாடல் உருவானது அந்த பாடல் படத்தின் துவக்கத்திலேயே இடம் பெற்றது.
"வாங்க வாங்க இன்று இரவு நல்லிரவு" என்று தொடங்கும் இந்த பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடினார். பாடலை கருணாநிதி எழுதியிருந்தார். பாடலுக்கு பத்மினி ஆடி இருந்தார் கீழ்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டுடியோவில் தியேட்டர் செட் அமைக்கப்பட்டு பாடல் படமாக்கப்பட்டது.