குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சென்னையில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி ஆண்டுதோறும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் சார்பில் மெய்நிகர் தொழில்நுட்பம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியது. 2022ம் ஆண்டு வெளிவந்த “லீ மஸ்க்'' என்ற படத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய்நிகர் தொழில்நுட்பத்தால் 37 நிமிடம் படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா? என கேட்டனர். அது புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.
மைக்ரோசாப்ட், ஆப்பிள், இன்டெல் தொழில்நுட்பங்கள் போல ஏன் இந்தியாவில் இருந்து ஒரு தொழில்நுட்பம் உருவாகக்கூடாது? என்று யோசித்தது உண்டு. இந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் அதிகம் பேர் பணிபுரிகிறார்கள். ஏன் அடுத்த ஆப்பிள் இந்தியாவில் இருந்து உருவாகக்கூடாது. இவையெல்லாம் நடப்பதற்கு அரசு உதவ வேண்டும். பெரிய, புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.