வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு பல்கலைகழக நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைகழக சேர்மன் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். செகரட்டரி ஏ.ரவிகுமார், துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் விஞ்ஞானியும், இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவருமான ஜி.ஏ.சீனிவாச மூர்த்தி, நடிகர் அர்ஜுன், இயக்குனர் பி.வாசு ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.