பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகை பூஜா ஹெக்டே படங்களில் நடித்து நடிப்பால் பெயர் வாங்குகிறாரோ இல்லையோ படத்துக்கு படம் ஏதோ ஒரு பாடலில் தனது வித்தியாசமான நடன அசைவுகளால் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார். புட்டபொம்மா, அரபிக் குத்து, கனிமா பாடல்களில் ஆடி அசத்தியவர், சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் மோனிகாவாக மாறி ரசிகர்களை நடனத்தில் கிறங்கடித்தார். அதேசமயம் சில நாட்களாக அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை.
இந்த நிலையில் தனது உடல்நிலை சரி இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. கூடவே பால்கனியில் ஒரு சோபாவில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அமர்ந்து குளிருக்கு இதமாக போர்வையை போர்த்தியபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார் பூஜா ஹெக்டே.