கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா ஆகியோரது திருமணம் டிசம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இரவு 8 மணி 13 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.
அதற்கான அழைப்பிதழை இரு குடும்பத்தாரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். நடிகர் நாகார்ஜுனாவுக்கும், அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா. ஆறு வருட திருமண வாழ்க்கையுடன் இருவரும் பிரிந்துவிட்டனர். தன்னுடன் சில படங்களில் நடித்த நடிகை அமலாவை நாகார்ஜுனா காதலித்ததே அதற்குக் காரணம். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரபல தயாரிப்பாளரான டி ராமாநாயுடுவின் மகள்தான் லட்சுமி. தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரி, 'பாகுபலி' நடிகர் ராணா டகுபட்டியின் அத்தை. அதன்பின் ஷரத் விஜயராகவன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.
நாக சைதன்யா, சோபிதா திருமணப் பத்திரிகையில் நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி அவரது கணவர் சரத், மற்றும் அப்பா நாகார்ஜுனா அவரது மனைவி அமலா ஆகியோர் அழைப்பதாக பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது.
நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தற்போது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.