தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ஜப்பான் படத்தின் தோல்விக்கு பிறகு ராஜு முருகன் இயக்கியுள்ள புதிய படம் 'மை லார்ட்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது 'மை லார்ட் ' கதைக்களம் குறித்து ராஜூ முருகன் ஒரு பேட்டியில் கூறியதாவது , " ஒரு தம்பதி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தினால், அவர்கள் கையில் உள்ள ரேஷன் கார்டையும் பறித்து, எங்கையோ கொண்டு நிறுத்தினால் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்பதை பற்றியது தான் படம். இயற்கை உங்களுக்கு தந்த பெயர் மனுஷன், மனுஷி. பெத்தவங்க வெச்ச பெயர் ஒண்ணு. ஆனால், உணர்ச்சிகளே இல்லாத ஒரு சிஸ்டத்துக்கு நீங்க வெறும் நம்பர், டோக்கன், ஓட்டு அவ்வளவு தான். ஆனால், அந்த நம்பரோ, டோக்கனோ, ஓட்டோ திருப்பி நின்னு ஒண்ணு பண்ணுனா அதுதான் மை லார்ட் படம்" என தெரிவித்துள்ளார்.