பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? |
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யா, சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் திருமண தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆந்திராவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா, சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என்றும் அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார்.
இவரது பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் வேணு சுவாமியை அழைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் தனது தவறை முழு மனதுடன் ஒப்புக்கொண்ட வேணு சுவாமி, மகளிர் உரிமை ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக தனது மன்னிப்பையும் அளித்துள்ளார்.