டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

மலையாள திரையுலகம் கடந்த வருடம் சில அற்புதமான படங்களையும் அபரிமிதமான வசூலித்த படங்களையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. அதிலும் 'பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ்' போன்ற சிறிய பட்ஜெட்டில் பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாம் 100 கோடி, 200 கோடி என வசூலித்தன. அதேபோல கடந்த வருட இறுதியில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆசிப் அலி நடிப்பில் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த 'ரேகசித்திரம்' என்கிற திரைப்படம் வெளியானது. கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். 80களின் பின்னணியில் நடக்கும் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. புலனாய்வு திரில்லர் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கியுள்ளார். இவர் மம்முட்டி நடித்த 'தி பிரிஸ்ட்' என்கிற ஹாரர் படத்தை இயக்கியவர்.
இந்த படம் வெளியான நாளிலிருந்து இதற்கு மவுத் டாக் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 கோடி வசூல் களத்தில் இந்த படம் இணைந்துள்ளது. இந்த 2025ல் வெளியான மலையாள படங்களில் முதலில் 50 கோடி வசூலித்த படம் என்கிற பெயரையும் இந்த படம் தட்டி சென்றுள்ளது.