‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

மலையாள திரையுலகில் சீரியல்களில் நடித்து ஓரளவு பிரபலமானவர் நடிகர் ரேஜன் ராஜன். சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி வருகிறார். இவருக்கு கடந்த ஆறு வருடங்களாக துணை நடிகை ஒருவர் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பியும் மிரட்டல் விடுத்தும் படப்பிடிப்பு தளங்களில் தொந்தரவு கொடுத்தும் தனது அத்துமீறலை தொடர்ந்துள்ளார். சமீபத்தில் இது குறித்த முழு விவரங்களையும் நமது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர், அந்த துணை நடிகை மீது போலீசிலும் தற்போது புகார் அளித்துள்ளார்.
இவரது புகாராய் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த துணை நடிகை என் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பழி சுமத்துகிறார்கள் என்று பதில் அளித்துள்ளார். அதே சமயம் சின்னத்திரை தொடர் ஒன்றில் நீண்ட நாட்களாக நடிகர் ரேஜன் ராஜனுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மிருதுளா என்பவர், சம்பந்தப்பட்ட துணை நடிகையின் அத்துமீறல்களை கொஞ்ச காலமாக கவனித்து வந்தவர் நடிகர் ரேஜன் ராஜனுக்கு ஆலோசனை கூறி இந்த விஷயத்தை வெளிப்படுத்துமாறும் காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறியதன் பேரிலேயே தற்போது நடிகர் ரேஜன் ராஜன் அந்த துணை நடிகை மீது புகார் அளித்துள்ளார்.
இது குறித்து நடிகை மிருதுளா கூறும்போது, “அந்த துணை நடிகை ரேஜன் ராஜனிடம் மொபைல் நம்பர் வாங்கி ஆரம்பத்தில் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பியும் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவரிடம் நேரில் நெருங்கி பழக முயற்சித்தும் வந்தார். ஆனால் ராஜன் அவரை தவிர்த்ததும் அவரை மிரட்டும் விதமாக பேசத் தொடங்கினார். ஆனால் இது குறித்து தான் வெளியில் பேசினால், பொதுவாக பெண்ணுக்குத்தான் ஆதரவு இருக்கும் என்பதால் தயக்கத்தில் ராஜன் இதுநாள் வரை பொறுமையாக இருந்து வந்தார்.
தற்போது இதற்கு முடிவு கட்டும் விதமாகத்தான் சம்பந்தப்பட்ட அந்த நடிகை குறித்து சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியும் காவல்துறையில் புகார் அளித்தும் உள்ளார் ராஜன். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.