வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா |
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஷெரினா. சூப்பர் மாடல் போட்டியில் பட்டம் பெற்றதன் மூலம் கவனிக்கப்பட்டார். 'பிக் பாஸ் சீசன் -6'ல் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். சமுத்திரகனி, தம்பி ராமையா நடித்த 'வினோதய சித்தம்' படத்தில் நடித்திருந்தார். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஷெரினாவின் மேலாளர் கவுரி ஜெகநாதன் கடந்த மாதம் 20ம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஷெரினாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஷெரினாவுக்கு போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா ஆகிய இருவரை மயிலாடுதுறையில் வைத்து போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜா உடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதும் போனில் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.