லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. அதோடு படத்தில் இடம் பெற்றிருந்த 2 நிமிடம் 6 விநாடி காட்சிகளை நீக்கி உள்ளது. அதோடு ஒரு நிமிடம் 49 விநாடி காட்சிகளை மாற்றம் செய்ய கூறியுள்ளது. இது தவிர சில கெட்ட வார்த்தை இந்த படத்தில் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது அதை நீக்கி உள்ளது. மத ரீதியான வசனங்களையும் நீக்கி உள்ளது. படத்தின் நீளம் மொத்தம் 152 நிமிடம், 38 விநாடிகள் என்று சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.