லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கமல்ஹாசனின் பேச்சும், செயலும் சில நேரங்களில் புரியாத புதிராக இருக்கும் என்பார்கள். தற்போது அவர் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றும் புரியாத புதிராக இருக்கிறது.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறார்கள். கருப்பு, வெள்ளையில் இந்த படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள பதிவில் ”இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு... இதுவே சூழ்நிலை ... இதுவே மாயை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளாரா ..? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.