பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் |
'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோவான அல்லு அர்ஜுன் படத்தை இயக்குகிறார் அட்லி. இந்த படத்தில் தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் தற்போது ராஷ்மிகா மந்தனா என பல நடிகைகள் நடிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. எதற்காக இத்தனை கதாநாயகிகள் என்கிற சந்தேகத்திற்கு விடையாக தற்போது ஒரு செய்தி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜுன் முதன்முறையாக நான்கு வேடங்களில் நடிக்கிறாராம். வயதான தாத்தா மற்றும் தந்தை, இரண்டு மகன்கள் என நான்கு வித கதாபாத்திரங்களாம். ஆரம்பத்தில் தாத்தா மற்றும் அப்பா கதாபாத்திரங்களுக்கு வேறு நடிகர்களை தான் அட்லி முடிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால் அல்லு அர்ஜுன், கதையை கேட்டதும் நானே அந்த கதாபாத்திரங்களிலும் நடிக்கிறேன் என்று சொன்னாலும் கூட அட்லிக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படவில்லையாம். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் லுக் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு அட்லிக்கும் நம்பிக்கை வந்ததாம்.
இதற்கு முன்னதாக மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் கமல்ஹாசன் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அது சம வயதுள்ள இளைஞர்கள் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதேபோல நடிகர் அஜித் வரலாறு திரைப்படத்தில் தந்தை, இரண்டு மகன்கள் என தோற்றத்தில் வித்தியாசம் காட்டி இருந்தார். அட்லியின் மெர்சல் படத்தில கூட விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். தற்போது அடுத்த கட்டமாக அல்லு அர்ஜுனை நான்கு வேடங்களில் நடிக்க வைத்து புதிய சாதனை படைக்க அட்லி தயாராகி வருகிறார் என்றே தெரிகிறது.