மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடித்துள்ள 'ரீவால்வர் ரீட்டா' படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து வலைதளங்களில் பேட்டி அளித்து வருகிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, "நமது திரைப்படத் துறை ஆண் ஆதிக்கம் உள்ள துறை என்பது கசப்பான உண்மை. பார்வையாளர்களின் பார்வையும் முக்கியம். உதாரணமாக, உங்கள் அபிமான ஹீரோ படமும், உங்கள் அபிமான ஹிரோயின் படமும் ஒரே நாளில் வெளியானால், பார்வையாளர்கள் நிச்சயமாக ஹீரோ படத்தை தான் பார்ப்பார்கள். படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஹீரோயின் சார்ந்த படங்களைப் பார்க்க பார்வையாளர்கள்வருகிறார்கள். எங்களுக்கு ஓபனிங் இல்லை" என கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.




