கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் | 8 ஆண்டுகளாக நான் நினைத்ததை பேச சுதந்திரம் இல்லை : திலீப் வேதனை | எதிர்ப்புக்கு பணிந்த சந்தானம், ஆர்யா : சர்ச்சைக்குரிய 'கோவிந்தா...' பாடல் நீக்கம் | பேய்ப் படமா? பாசப் படமா? : ரசிகர்கள் ஆதரவு எந்தப் படத்திற்கு ? | தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்? |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுக்க கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுத்து கொண்டாடப்படும் என சமீபத்தில் நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. அதன் ஒருபகுதியாக திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கும் பணி நடக்கிறது. இன்று(நவ., 17) நடிகர் ரஜினிகாந்த்திற்கு நேரில் சென்று திரையுலகினர் அழைப்பு விடுத்தனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் ரஜினியை நேரில் சென்று அழைத்தனர். ரஜினியும் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
அதேப்போல் நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முரளி ராமசாமி, ஆர் கே செல்வமணி, நாசர், பூச்சி முருகன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
படப்பிடிப்பு ரத்து
தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் 24ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவிற்காக டிச 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.