லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ஒரு சில படங்கள் ஹிட் அடிக்க பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் ஐந்து படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு இந்த வருடம் இதுவரையிலும் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தை தொடர்ந்து வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஹிந்தியில் மட்டும் தேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவருக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி துபாயில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார் ஆனால் பூஜா ஹெக்டேவின் சோசியல் மீடியா குழுவினர் இந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை.. யாரோ ஏதோ காரணத்திற்காக இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்த செய்தியை மறுத்துள்ளனர்.