ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தண்டேல்' படம் ஆந்திரா, தெலுங்கானாவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் நாக சைதன்யா. பட வெளியீட்டுக்குப் பிறகும் புரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் சமந்தாவை விவாகரத்து செய்தது பற்றிய கேள்விக்கு அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : நானும் அவரும்(சமந்தா) அவரவர் வழியில் செல்ல விரும்பி, எங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்தோம். ஒருவர் மீது ஒருவர் அதிகமான மரியாதை வைத்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறோம். இதுபற்றி மேலும் என்ன விளக்கம் தேவைப்படுகிறது என்று புரியவில்லை.
நானும், சமந்தாவும் இதையெல்லாம் கடந்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். நான் மீண்டும் ஒரு காதல் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.விவாகரத்து என்பது என் வாழ்க்கையில் மட்டும் நடந்தது போன்று ஏன் கருதுகிறீர்கள், என்னை ஏன் ஒரு குற்றவாளியைப்போல் பார்க்கிறீர்கள். திருமண உறவில் இருக்கும்போதே மிகவும் சிந்தித்து, அதிக மரியாதையுடன் பிரிந்து செல்லும் முடிவை எடுத்தேன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இது மிகவும் சென்சிடிவ்வான ஒரு விஷயம். காரணம், உடைந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனவே, அந்த அனுபவத்தை நான் நன்றாக அறிவேன். ஒரு உறவை விட்டுப் பிரிந்து செல்லும் முன்பு ஆயிரம் முறையாவது யோசிப்பேன். ஏனெனில், அதன் விளைவுகளை அறிவேன். இருவரும் பரஸ்பரம் பேசித்தான் முடிவு செய்தோம். ஒரே இரவில் அந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை.
தயவு செய்து எங்களின் தனிப்பட்ட உரிமைக்கு, சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள். இதுபோன்ற கேள்வியை அவரிடமும் கேட்காதீர்கள். அவரிடமும் இதே பதில்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.