மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

போயாபதி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'அகண்டா 2' படம் கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்திற்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும் இடையேயான பணப் பரிமாற்ற பாக்கித் தொகை காரணமாக ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத் தடை உத்தரவை வாங்கியது. தெலுங்கின் சீனியர் டாப் ஹீரோவான பாலகிருஷ்ணா படம் நீதிமன்ற உத்தரவால் வெளியாகாமல் போனது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானாலும் அடுத்த நாளே படத்தை வெளியிட முயற்சித்தும் முடியவில்லை.
அதன்பின் இரண்டு நிறுவனங்களும் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்பார்த்ததைப் போலவே நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு நீக்கத்தைப் பெற்றதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10 மணிக்கு மேல் டிசம்பர் 12ல் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 11ம் தேதி படத்தின் பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.