நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் படம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுனின் 22வது படாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகும் இந்தப் படத்தில் 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' ஒன்று அனைவரிடமும் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படம் முடியும் வரை படம் குவித்த எந்த ஒரு தகவலையும் யாரும் வெளியில் சொல்லக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஆங்கிலத்தில், 'Non Disclosure Agreement'. இதை 'ரகசிய ஒப்பந்தம்' என்றும் கூட சொல்லலாம். அதாவது படத்தின் ரகசியம் எதையும் வெளியில் சொல்லக் கூடாது.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற உள்ளார்கள். கடந்த மூன்று வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் தடைபட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
ஹாலிவுட் கலைஞர்களும் படத்தில் பணியாற்ற உள்ளதால் எந்த விதத்திலும் படத்திற்கு சிக்கல் வராத அளவிற்கு படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளார்களாம்.