நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் | பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு |
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவருடைய முதல் படமான 'மாநகரம்' படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்திருந்தார். இரண்டாவது படமான 'கைதி' படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களிலுமே பின்னணி இசைக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
அதன்பின் லோகேஷ் இயக்கிய 'மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படங்களின் பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் நான் படங்களை இயக்க மாட்டேன். அவர் திரையுலகை விட்டுப் போனால் மட்டுமே வேறு யார் என்று பார்ப்பேன். எனது படங்களுக்கு 'ஏஐ' இசை தேவையில்லை, ஏனென்றால் என்னிடம் அனிருத் இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.
இதனால், லோகேஷ் அடுத்து இயக்கும் 'கைதி 2' படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கடந்த வருடம் சாம் சிஎஸ் அளித்த ஒரு பேட்டியில், “லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்திருந்தார். 'கைதி 2' படத்தில் நாம் இருவரும் இணைந்து பணிபுரிவோம் என்று கூறினார்,” என்று சொல்லி இருந்தார். இப்போது லோகேஷ், எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் படம் இல்லை என சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் படத்தையும், ரஜினி படத்தையும் இயக்கும் வாய்ப்பை லோகேஷிற்கு அனிருத் தான் பெற்றுத் தந்தார் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதற்கு நன்றியாகத்தான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்கிறார்கள்.