இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
பெரும் வெற்றி பெற்ற 'ஹனுமான்' படத்தில் கதாநாயகனாக நடித்த தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்க கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள படம் 'மிராய்'. இப்படத்தில் ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் இளைய மகன். ரஜினியின் நெருங்கிய நண்பராக மோகன்பாபு இருந்தாலும், அவருக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்து விவகாரத்தில் தகராறு உள்ளது. இருந்தாலும் மஞ்சு மனோஜ் நடித்துள்ள 'மிராய்' படத்தின் டிரைலரைப் பார்த்து ரஜினி பாராட்டியுள்ளார்.
இது குறித்து மஞ்சு மனோஜ் எக்ஸ் தளத்தில், “மிராய் டிரைலரை பார்த்து எங்களை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார்ந்த நன்றி. அன்பு சகோதரர் சிவகார்த்திகேயனின் மதராசி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக மக்களுக்கும், ஊடக நன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.