அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
விஜயகாந்த் பெரும்பாலும் ஆக்ஷன் அதிரடி படங்களில்தான் நடிப்பார். அவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கென்று தனி நடிகர்கள் இருப்பார்கள், தனி டிராக் இருக்கும். என்றாலும் விஜயகாந்த் காமெடி நாயகனாக நடித்த படம் 'நானே ராஜா நானே மந்திரி'.
பாலு ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்துடன் ராதிகா, ஜீவிதா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். விஜயகாந்த் ஒரு கிராமத்தின் ஜமீன்தார். படிப்பறிவு இல்லாத காரணத்தில் அவர் செய்யும் காரியங்கள் காமெடியாக இருக்கும். அந்த ஜமீனில் வேலை பார்க்க வருகிறார் ராதிகா. விஜயகாந்தின் காமெடிகளை ரசிக்கும் அவர், அவரையே காதலிக்கவும் ஆரம்பிப்பார். ஆனால் அவருக்கோ அத்தை மகள் ஜீவிதா மீதுதான் காதல். இந்த காதல் காமெடியாக எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் வெளிவந்து ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது.