ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது அண்ணன் சக்கரபாணி, மற்றும் சில மூத்த படத் தயாரிப்பாளர்களில் காலில் விழுந்து வணங்கி உள்ளார். ஆனால் அவரே ஒரு நடிகையின் காலில் விழுந்து வணங்க நினைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. 'அலைகள் ஒய்வதில்லை' படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்த கமலா காமேஷ்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் 100வது நாள் விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது பாரதிராஜாவையும், படத்தையும் பாராட்டி பேசிவிட்டு, “படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருந்தார். படத்திலேயே அவருடைய நடிப்புதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் உண்மையிலேயே வயதானவராக இருப்பார், அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ இளமையான பெண்ணாக இருக்கிறார். அதனால் அவரை இருகரம் கூப்பி வணங்குகிறேன்” என்று பேசினார். விழா முடிந்ததும் கமலா காமேஷை தனது காரில் அவரது வீடு வரை அழைத்துச் சென்று மரியாதை செய்தார்.