ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் |
மிகவும் சோகமான கதை 'நல்லதங்காள்' என்கிற நாட்டுப்புற கதை. தனது 7 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் சோக கதை அது. இந்த கதை திரைப்படமாக வந்தபோது தியேட்டருக்கும் வெளியேயும் கேட்டதாம் பெண்களின் அழுகை குரல்.
அதே மாதிரியான இன்னொரு படம் 'பெண் மனம்'. 1952ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எஸ்.சவுந்தர்ராஜன் என்பவர் இயக்கினார். டி.கே. சண்முகம், வி.கே. ராமசாமி, எஸ்.ஏ. நடராஜன், எம்.வி. ராஜம்மா, எம்.என். ராஜம், மேனகா, சி.டி. ராஜகாந்தம், கே.எஸ். அங்கமுத்து, முத்துலட்சுமி, புலிமூட்டை ராமசாமி, மற்றும் கோட்டபுலிக் ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
தஞ்சையை சேர்ந்த ஏழை விவசாயி பரமசிவம்(டி.கே.சண்முகம்), அவரது மனைவி மீனாட்சி (எம்.வி.ராஜம்மா). இவர்களுக்கு 3 குழந்தைகள், விவசாயம் பொய்த்து வறுமை ஏற்படுகிறது. இதை சமாளிக்க முடியாமல் யாரிடமும் சொல்லாமல் இலங்கைக்கு சென்று விடுகிறார் பரசிவம், அங்கு ஒரு நாடக கமபெனியில் சேர்ந்து வாழ்கிறார்.
குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட மீனாட்சி கொடூரமான வாழ்க்கை வாழ்கிறார். ஒரு குழந்தையும் இறந்து விடுகிறது. மீனாட்சியை ஊர் மக்கள் இழிவாக பேசுகிறார்கள். இதனால் நல்ல தங்காள் போன்று குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது ஒரு சாது அவர்களை காப்பாற்றி அவரவணைக்கிறார்.
இதற்கிடையில் இலங்கை சென்ற பரமசிவம் அங்கு ஒரு பணக்காரின் மகளை காப்பாற்றியதால் அவருக்கு பெரும் தொகை பரிசாக கிடைக்கிறது. அந்த பணத்துடன் குடும்பத்தை தேடி வருகிறார். ஆனால் குடும்பம் எங்கே இருக்கிறது. என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்களை தேடி அலைகிறார் . கண்டுபிடித்தாரா குடும்பத்துடன் சேர்ந்தாரா என்பது படத்தின் கதை.
கேட்கும்போதே கண்ணீரை வரவழைக்கும் கதை. அன்றைக்கு பெண்களை கதறவிட்டதில் வியப்பில்லை.