டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் |
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிதேவன் இயக்கி உள்ள படம் 'சிங்கா'. இதில் ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி.மதியழகன், தித்திர் பிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயகுனர் ரவிதேவன் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழு நீளத் திரைப்படமாக தயாராகிறது. விலங்கு நல வாரியத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இப்படத்தை உருவாக்கி வருகிறோம். பலருக்கு கதை பிடித்தபோதும், நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். 1945, பொதுநலன் கருதி மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இந்த வேடத்தை திறம்பட செய்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பான் - இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிப்பார்கள். என்றார்.