மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்துள்ள படம் 'நிறங்கள் மூன்று'. துருவங்கள் 16, மாபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி, துஷ்யந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து படித்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா பேசும்போது, "கார்த்திக்கின் 'துருவங்கள் பதினாறு' படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். நிஜத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தைதான் எனக்கு இதில் கொடுத்தார். பயம் கலந்த சந்தோஷத்துடன் அவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாசமான படம். எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது.
சரத்குமார் சார், ரகுமான் சார் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா சார் மற்றும் மனோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் கொடுத்துள்ளது. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளது" என்றார்.