ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

நடிகர் அதர்வா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'டிஎன்ஏ' படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதர்வா நடித்து முடித்து கடந்த ஒரு வருடமாக கிடப்பில் கடந்த ‛தணல்' படத்தை தற்போது திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். இதில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
'வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் 'தணல்'. இந்த படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். அஷ்வின் காக்குமானு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷாரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று ரிலீஸூக்கு தயாராகவுள்ள இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.