ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

நடிகர் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளையொட்டி நாளை சென்னையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க, அவர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றன. அவரின் சினிமா வாழ்க்கையில் 50வது ஆண்டில் வரும், 75வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். அவர் நடித்த படையப்பா நாளை பல்வேறு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
தமிழகம் முழுக்க படையப்பா வெளியாகும் தியேட்டர்களில் பிறந்தநாளை கொண்டாடவும், படையப்பா ரீ ரிலீசை வரவேற்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. நாளைய தினம் ரஜினிகாந்த் குடும்பத்துடன் திருப்பதியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் சென்னைக்கு திரும்பிவிட்டால் நேரில் போயஸ்கார்டன் சென்று வாழ்த்து தெரிவிக்கவும் ரசிகர்கள், ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
தமிழகம் தவிர, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படையப்பா ரிலீஸ் ஆவதால், அங்கும் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 சிறப்பு போஸ்டர், வீடியோ நாளை வெளி வர வாய்ப்பு. கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு, இயக்குனர் பெயர் நாளை அறிவிக்கப்படுமா என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.