படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் அவரது 173வது படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சுந்தர்.சி இந்த படத்தை விட்டு வெளியேறினார். சமீபத்தில் கிடைத்த தகவலின் படி ரஜினி 173வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பை வருகின்ற டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக சாய் அபயன்கர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்பு கூட்டணியில் உருவாகவிருந்த படத்திற்கும் சாய் அபயன்கர் தான் இசையமைக்கிறார் என அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.