மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? |

1997ம் ஆண்டு வெளியான கங்கா கவுரி படத்தில் நடித்தார் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இப்போது அவர் மகன் லியோ சிவா மாண்புமிகு பறை என்ற படத்தில் ஹீரோ. தனது சினிமா அனுபவம் குறித்து லியோனி கூறுகையில், கங்கா கவுரியில் அன்போடு நடிக்க அழைத்தார்கள். அடுத்து பல வாய்ப்பு வந்தது. அப்போது பள்ளியில் ஆசிரியர் ஆக வேலை செய்து வந்தேன். அது நடிக்க தடையாக இருந்தது. பாரில் சரக்கு அடிக்கிற கேரக்டர் வந்தது. அதை பார்த்தால் மாணவர்கள் கிண்டல் செய்வார்கள். ஆசிரியர் வேலையா? நடிப்பா என்ற நிலை வந்த போது வேலையில் தொடர முடிவு செய்தேன். அடுத்து பட்டிமன்றத்தில் பிஸி ஆனதால் நடிக்க முடியவில்லை. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் மாமனாராக நடிக்க கூட வாய்ப்பு வந்தது. என்னால் நடிக்க முடியவில்லை. இப்போது என் மகன் நடிக்கிறார். நானும் சில படங்களில் நடிக்கிறேன். மாண்புமிகு பறை படத்திற்கு தேவா இசையமைக்கிறார். அவருக்கு இன்னும் தேசிய விருது கிடைக்காதது வருத்தம்'' என்றார்.