ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

வாரந்தோறும் புதுப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் தியேட்டருக்கு செல்வது போல், ஓடிடி தளத்தையும் ஆர்வமுடன் செக் பண்ணுவது வாடிக்கையாகி விட்டது. சினிமா மட்டுமல்லாமல், த்ரில்லர், காதல் எனப் பல வகை கொண்ட சிறப்பான வெப் தொடர்களும் வெளியாவதால், ரசிகர்கள் அவற்றை ரசிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் இந்த வாரம் 'காந்தா' முதல் புதிய வரவுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
காந்தா
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், சமுத்திர கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் 'காந்தா'. இந்த திரைப்படம் நாளை(டிச.12ம் தேதி) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆரோமலே
இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ் ஷிவாத்மிகா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்படம்'ஆரோமலே'. கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் நாளை(டிச.12ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அந்தகாரா
இயக்குநர் வாசுதேவ் சனல் இயக்கத்தில், திவ்யா பிள்ளை, சந்துநாத் ஜி நாயர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிரைம் த்ரில்லர் படம் 'அந்தகாரா'. இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(டிச.12ம் தேதி) வெளியாகவுள்ளது.
பெமினிச்சி பாத்திமா
இயக்குநர் பாசில் முகம்மது இயக்கத்தில் பிரசீதா, ராஜி ஆர் உன்னி, பபிதா பஷீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பெமினிச்சி பாத்திமா'. காமெடி திரைப்படமான இந்த படம் நாளை(டிச.12ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.