ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

சமீபகாலமாக ஏஐ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப் பிரபலங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வருகிறார்கள். பாடகி சின்மயின் புகைப்படங்களையும் யாரோ விஷமிகள் மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். அது குறித்த ஸ்கிரீன் ஷாட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதோடு அருவருக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு அடங்கி போக வேண்டும் என்று ஆணாதிக்க சமூகம் நினைக்கிறது. அப்படி அடங்கி போகாத பெண்களும், பெண் குழந்தைகளும் செத்துப் போகலாம் என்று இந்த குரூர புத்தி உடையவர்கள் பதிவு போடுகிறார்கள். எதிர்த்து பேசும் பெண்களை ஏதாவது ஒரு வகையில் இது போன்று இழிவுபடுத்துகிறார்கள். முன்பெல்லாம் பெண்களை பேய் பிடித்தவள், வசியம் செய்தவள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பிங் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இது போன்ற அயோக்கியர்களுக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது என்று ஆவேசமாக பேசி உள்ளார் பாடகி சின்மயி.