ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை |

தென்னிந்திய திரை உலகில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பிஸியாக நடனம் அமைத்து வருபவர் ஜானி. கடந்த வருடம் தன்னிடம் நடன கலைஞராக பணியாற்றிய மைனர் பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாகவும் படப்பிடிப்பு தளத்தில் அவரை மிரட்டியதாகவும் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்து தற்போது படங்களில் பணியாற்றி வருகிறார்..
ஜானி மாஸ்டர் மீது இப்படி பாலியல் குற்றச்சாட்டு வெளியானதில் இருந்து அவ்வப்போது நடிகை சின்மயி அவர் குறித்த தனது கருத்துக்களை துணிச்சலாக வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியானபோது அதை பலர் விமர்சித்த நிலையில், சின்மயி அதுபற்றி விமர்சிக்கவில்லை. அது குறித்து கேட்ட ரசிகர்களுக்கு கூட, ஏ.ஆர் ரஹ்மானுக்கு அந்த பாடலுக்கு யார் நடனம் அமைக்கிறார்கள் தெரியாது என தன்னிடம் சொன்னதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அது குறித்து நெட்டிசன் ஒருத்தர் வெளியிட்ட பதிவுக்கு பதில் அளித்துள்ள சின்மயி, “நான் நடன இயக்குனர் ஜானி பற்றி எப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் பேசுகிறேனோ அப்போதெல்லாம் அவரது மனைவி ஆயிஷா என்னை தொடர்பு கொண்டு தயவுசெய்து இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் பேச வேண்டாம். அவர் மீது தவறு இல்லை. அவர் குற்றமற்றவர் என்று தன்னை நிச்சயம் நிரூபிப்பார் என்பதை திரும்பத் திரும்ப என்னிடம் கூறுவார். ஜானி மாஸ்டர் வசதியானவர். மற்றும் பெரிய இடத்துடன் தொடர்பு கொண்டவர். அந்த நம்பிக்கையில் அவரது மனைவி நிச்சயமாக தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என பேசுகிறார்.
இந்த வழக்கில் 100% சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியானதும் எல்லோரும் தங்களது கைகளை கழுவிக்கொண்டு அவர் ஒரு அப்பாவி, அவருக்கு இன்னும் பல விருதுகள் கிடைக்கலாம் என்று கூற ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஜானி மாஸ்டர் பல நாள் போற்றப்படும் நபராக வலம் வருவார். அதே போல அவரால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் வெற்றியாளராக மாறி இப்படி குற்றம் சாட்டப்பட்ட நபரை கொண்டாடும் இந்த சமூகத்தின் முன்னாள் தன்னையும் நிரூபிப்பார் என்றும் நான் நம்புகிறேன். அவருக்காக பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.