மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'தக்லைப்' படத்தை அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு என்ற இரட்டையர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். அவரது 237வது படமான இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட போதும், 'தக்லைப்' படத்தின் தோல்வி காரணமாக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கமல் 237வது படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது ரவி மோகனுடன் 'ஜீனி' என்ற படத்தில் நடித்துள்ளார்.