இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கன்னட நடிகரான சுதீப் நடிக்கும் அவரது 47வது படத்தின் பெயரை 'மார்க்' என அறிவித்துள்ளார்கள். இன்று சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தை சுதீப் நடித்த 'மேக்ஸ்' படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா இயக்குகிறார். இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். சுதீப்பின் 47வது படத்தை இயக்குனர் சேரன் இயக்குவதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாட்டால் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார். அதன்பிறகு 'மேக்ஸ்' இயக்குனரை அழைத்து இப்படத்தை ஆரம்பித்தார்கள். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் வெளியீடாக படம் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு முதலில் மேக்ஸ் 2' என்றுதான் பெயர் வைப்பதாக யோசித்தார்களாம். ஆனால், 'மேக்ஸ்' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தாணு அத்தலைப்பைத் தரவில்லை என்று சொல்கிறார்கள். எனவே, 'மார்க்' என்று வைத்துள்ளார்கள்.